ஸ்டுடென்ட்ஸ் டாட் காம் கல்வி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி ஆலோசனை மையம் இணைந்து நடத்தும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் இலவச உயர் கல்வி வழங்கும் விழா-2023
இந்நிகழ்ச்சியின் நோக்கம்: 1. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போற்றத்தக்க திறமை இருந்தும் தனது வறுமையின் காரணமாக உயர்கல்வி பயில முடியாத மாணவர்களை தேர்வு செய்து அம்மாணவர்களை இலவசமாக படிப்பதற்கு உதவி செய்து வருகின்றோம். 2. மேலும் இவ்விழாவில் கல்வியாளர்கள் துறை சார்ந்த வல்லுனர்கள் அரசு கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். 3. மத்திய மாநில அரசு தரக்கூடிய கல்வி உதவித்தொகைகள் பற்றியும் அந்த உதவித்தொகையினை எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதனை பற்றியும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கின்றனர். 4. மேலும் இவ்விழாவில் தலைசிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் முக்கியத்துவத்தினை பற்றி விளக்கம் அளிக்கின்றனர். 5. சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி வழிகாட்டுதலின் மூலம் அரசு போட்டித் தேர்வினை எதிர்கொள்வது எப்படி மற்றும் அரசு வேலைக்கு செல்வதற்கு தேவையான படிப்புகள் பற்றியும் விளக்கம் அளிக்கின்றனர். 6. மேலும் இச்சிறப்பு மிக்க விழாவில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கலந்து கொண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய திறமையான ஏழை மாணவர்களை இலவசமாக படிப்பதற்கு தேர்வு செய்ய உள்ளார்கள். 7. ஆகவே மாணவர்கள் இந்த உன்னதமான வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய உயர்கல்வி கனவை நினைவாக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கி றோம். 8. மேலும் இலவசமாக படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் இலவச ஆணையை இவ்விழாவின் முடிவில் சிறப்பு விருந்தினர்கள்,மருத்துவர்கள்,சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மற்றும் கல்லூரிகளின் நிறுவனர்கள் ஆகியோரின் பொற்கரங்களால் வழங்கப்படும் என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.