• Ramanathapuram
  • +91 9952592489,
  • s.studentsdotcom@gmail.com
  • Admission
  • Scholarship

Important Notice : : Students Dot Com was set up in June 2012, as a Non-Profit Organization by the Top Doctors, Engineers, and Social Activists in Ramanathapuram. Headquartered in Ramanathapuram, studentsdotcom operates with various branches at ( Sivaganga, Thothukudi, Thirunelveli, Tenkasi, Thanjavur thirupur viruthunagar theni dharmapuri madurai Trichy dindukkal Cuddalore)

Events

Event Date : 2023-03-18

இராமநாதபுரம் மாவட்ட அனைத்து மகளிர் குழு கலந்தாய்வு கூட்டம்

STUDENTSDOTCOM நிறுவனத்தின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்மையை போற்றுவோம் என்ற தலைப்பில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குட்பட்ட அனைத்து மகளிர் குழு கலந்தாய்வுக் கூட்டம்(18-03-2023) தங்கச்சிமடம் RK லியோன் மஹாலில் நிறுவனர் சாலிஹ் ரஹ்மான் அவர்கள் தலைமையில நடைபெற்றது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். திரு சாலிஹ் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக SURESH IAS ACADEMY RAMANATHAPURAM ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு அவர்கள் ,AT INSTITUTE OF ALLIED HEALTH & PARAMEDICS திரு சித்திக் அஹமது அவர்கள் ,HOLY CROSS COLLEGE OF ENGINEERING PRO திரு பாஸ்கர் மற்றும் NOBLE DOCTORS FOUNDATION திரு. இம்ரான் அப்துல் சலீம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மகளிர் குழுவின் தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில்,(12-03-2023) அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மகளிர் குழு கூட்டத்தில் உதவி கோரியவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் மருத்துவ துணை படிப்பில் இலவசமாக பயில்வதற்கான சேர்க்கை கடிதமும் வழங்கப்பட்டது 1 MBBS ஒரு மாணவருக்கு அடுத்த பருவத்திற்கான கல்வி கட்டணமும், 2. மருத்துவ துணை படிப்புகள் பயில இரு மாணவர்ளுக்கு சேர்க்கை கடிதமும் 3. பொருளாதாரத்தில் நலிவடைந்த ஒரு மாணவருக்கு தொடர்ந்து உயர் கல்வி பயில்ந்திட கல்வி உதவித் தொகையும் ஆகியன வழங்கப்பட்டது. திருமதி கண்மணி அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் STUDENTSDOTCOM பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர் . நிறுவனத்தின் சார்பில் அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.